தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வக்பு வாரியம் சரியான முறையில் அமைப்பு

 வக்பு வாரியம் சரியான முறையில் அமைப்பு

 வக்பு வாரியம் சரியான முறையில் அமைப்பு


ADDED : மார் 10, 2026 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி மாநில வக்பு வாரியம் குறித்து குற்றச்சாட்டுகள் தவறானது என என்.ஆர்.காங்., மாநில சிறுபான்மையினர் அணி தலைவர் இக்பால்பாஷா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

புதுச்சேரி முதல்வராக இருந்த நாராயணசாமி அப்போது நடைமுறையில் இருந்த வக்பு சட்டத்தின் படி, வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரியில் பல பள்ளிவாசல்களுக்கு முத்தவல்லிகள் அல்லது முறையான நிர்வாகக் குழுக்கள் இல்லாததால் நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. இதனை கருத்தில் கொண்டு, வக்பு சொத்துகளை பாதுகாக்கவும், பள்ளிவாசல்களின் நிர்வாகத்தை சீரமைக்கவும் வக்பு வாரியம் தற்போதைய அரசு எடுத்துள்ளது. இத்தகைய நல்ல நடவடிக்கையை வரவேற்காமல், அதை அரசியல் நோக்கில் விமர்சித்துள்ளது வருத்தத்திற்குரியது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us