முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு
முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு
ADDED : மார் 26, 2026 08:46 PM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு திட்டத்தின் கீழ், மாநில நோடல் அதிகாரி கோவிந்தசாமி தலைமையில், 6 கல்வி நிறுவனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அதன்படி, பிம்ஸ், மத்திய பல்கலைக்கழகம், ராஜிவ்காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மற்றும் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், முதல் முறையாக ஓட்டு அளிக்கும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
நோடல் அதிகாரி கோவிந்தசாமி, ஓட்டு அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஜனநாயகத்தை வலுப்படுத்த இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது என, தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளில் இ.எல்.சி., நோடல் அதிகாரி வருண், என்.எஸ்.எஸ்., அதிகாரி சதீஷ், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் கருணாகரன், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலனி பேராசிரியர் மெய்யப்பன் ஆகியோர் பொறுப்பான குடியுரிமை, நேர்மையான ஓட்டு அளிப்பு மற்றும் தேர்தல் செயல்பாட்டில் ஈடுபடுவதன் அவசியம் குறித்து விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து, தேர்தல் ஓட்டளிப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
