ADDED : செப் 19, 2026 03:19 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வாலிபர் ஊருக்குள் நுழைய தடைவிதிக்க வேண்டும் என, கலெக்டருக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
பூமியான்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ், 25. இவர் மீது ரெட்டியார்பாளையம் போலீசில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
இவரால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதால், இவரை ஊருக்கு நுழைய தடை விதிக்க வேண்டும் என, கலெக்டருக்கு, ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று பரிந்துரை செய்துள்ளனர்.
