ADDED : செப் 19, 2026 03:20 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை, சாந்தி நகர், விநாயகர் கோவில் தெருவை ஜீவானந்தம், 33; ஏ.சி., மெக்கானிக். இவரது வங்கிக் கணக்கிலிருந்து, கடந்த 15ம் தேதி அடுத்தடுத்து 5 தவணைகளாக 4 லட்சத்து 72 ஆயிரத்து 862 ரூபாய் எடுக்கப்பட்டதாக, அவரது மொபைலுக்கு குறுஞ்செய்திகள் வந்தன.
அதைகண்டு, அதிர்ச்சியடைந்த ஜீவானந்தம் உடனடியாக கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இதையடுத்து, போலீசார் அவரது மொபைலை வாங்கி ஆய்வு செய்தபோது, அதில் வங்கி தொடர்பான மோசடி செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு இருப்பதும், அதன் மூலமாகவே மர்மநபர்கள் பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, மேல் நடவடிக்கைக்காக லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு வழக்கை மாற்றியுள்ளனர்.
