
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் இந்திய கம்யூ., கட்சி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
காரைக்கால் மாவட்டம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. புயல் பாதிப்பு நிவாரண நிதியாக அரசு கோரியுள்ள ரூ.614.88 கோடி நிதியை முழுமையாக வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. எனவே பயிர் காப்பீடு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30ஆயிரம் இழுப்பீடு வழங்கவேண்டும்.
வீடுகளை இழுந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.