
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி மீனவம் காப்போம், மக்கள் இயக்கம் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
முதலியார்பேட்டை தபால் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் மாவட்ட பொறுப்பாளர்கள் இலக்கியா, அருந்ததி, விழிமலர் ஆகியோர் தலைமை தாங்கினார்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். இதில், நேரு எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர் செல்வநாதன், மீனவர் நலத்துறை உதவி ஆய்வாளர் குருமூர்த்தியிடம் தகராறு செய்ததாக பதிவு செய்துள்ள பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, மீனவர் நலத்துறை உதவி ஆய்வாளர் குருமூர்த்தி மீது முதலியார்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.