தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மரில் ஒப்பந்த செவிலியர் நியமனத்தை எதிர்த்து போராட்டம்

ஜிப்மரில் ஒப்பந்த செவிலியர் நியமனத்தை எதிர்த்து போராட்டம்

ஜிப்மரில் ஒப்பந்த செவிலியர் நியமனத்தை எதிர்த்து போராட்டம்


ADDED : அக் 30, 2024 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2024 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ஜிப்மரில் ஒப்பந்த செவிலியர் நியமனம் செய்யும் முடிவை கைவிட வலியுறுத்தி செவிலியர்கள் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தினர்.

ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுப்பட்டு வருகிறது.

இதனை அறிந்த ஜிப்மர் செவிலியர்கள், ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒப்பந்த செவிலியர் தேர்வு முடிவை கைவிட வேண்டும். தேர்வு நடத்தி தகுதி அடிப்படையில் நிரந்தர செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, கோரிக்கை விடுத்து, ஜிப்மர் செவிலியர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவு வாயில் அருகே ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அடுத்த கட்டமாக வேலை நிறுத்தம், உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாகவும் செவிலியர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us