/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீன்பிடி துறைமுகம் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு காரைக்காலில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

ADDED : அக் 06, 2025 01:34 AM

காரைக்கால்: காரைக்கால் கருக்களாச்சேரியில் மீன் பிடித்துறைமுகம் விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் 11 கிராம மீனவர்கள், 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலுக்கு தொழிலுக்கு செல்கின்றனர்.
பிடிக்கும் மீன்களை, கருக்காளச்சேரி மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வந்து, பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
இந்த மீன்பிடித் துறைமுகத்தை மத்திய அரசு ரூ. 130 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், துறைமுகம் விரிவாக்கம் செய்தால் கிராமத்தின் சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்பதால், விரிவாக்கப் பணியை வேறு பகுதிக்கு மாற்றக்கோரி கருக்காளச்சேரி கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும், கவர்னர், முதல்வர் உள்ளிட்டோரிடம் மனு அளித்து வந்தனர்.இந்நிலையில், துறைமுகம் விரிவாக்கப் பணியை, வரும் 11ம் தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைக்க உள்ளார்.
இதனால், ஆவேசமடைந்த கருக்காளச்சேரி கிராம மக்கள், துறைமுக விரிவாக்க திட்டத்தை கண்டித்து நேற்று கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றினர்.
நாக தியாகராஜன் எம்.எல்.ஏ., தலைமையில், கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.