/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேனர் அகற்ற எதிர்ப்பு: பாகூரில் பரபரப்பு
/
பேனர் அகற்ற எதிர்ப்பு: பாகூரில் பரபரப்பு
ADDED : ஏப் 23, 2025 04:01 AM
பாகூர் : பாகூரில் பேனர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அரசு ஊழியர்களிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
பாகூர், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில், காட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தடை மீறி, அரசியல், திருமணம், பிறந்த நாள், துக்க நிகழ்வு உள்ளிட்டவைகளுக்கு பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பதுடன், விபத்துக்களும் ஏற்படுகிறது.
இதற்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாகூரில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றிட, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள்நேற்று சென்றனர்.
சிவன் கோவில் பகுதியில் இருந்த சில பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு தரப்பினர், அங்கு பேனரை கொண்டு வந்து வைத்தனர். இதற்கு, பொதுப்பணித்துறை ஊழியர்கள், இங்கு பேனர்கள் வைக்க அனுமதி கிடையாது என, அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது, அவர்கள், மற்ற இடங்களில் உள்ள பேனர்களை அகற்றி விட்டு, பின், இங்கு வாருங்கள் என கூறி பேனரை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனைத்து பேனர்களையும் தான் அகற்றப்போகிறோம் என ஊழியர்கள் கூறி சென்றனர்.