போக்குவரத்துறை அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம்
போக்குவரத்துறை அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம்
ADDED : செப் 11, 2026 11:43 PM
புதுச்சேரி: புதுச்சேரி ரீ சேல் கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நலச்சங்கத்தினர் போக்குவரத்துறை அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி ரீ சேல் கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நலச்சங்கத்தினர் நேற்று மாலை நுாறு அடி சாலை அருகில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகத்தில் திரண்டனர். அவர்கள் திடீரென போக்குவரத்து துறை அதிகாரியை முற்றுகையிட்டு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு சங்க தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் ஆர்.சி.புக்., பெயர் மாற்றும் முறைகளை எளிமையாக்க வேண்டும். பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆர்.சி., புக்கை சம்பந்தப்பட்ட நபருக்கு நேரடியாக விரைந்து வழங்க வேண்டும். பெயர் மாற்றம் குறித்த கட்டண குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
