/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெஸ்டோ பார் அனுமதியை கண்டித்து மகளிர் அமைப்புகள் போராட்டம்
/
ரெஸ்டோ பார் அனுமதியை கண்டித்து மகளிர் அமைப்புகள் போராட்டம்
ரெஸ்டோ பார் அனுமதியை கண்டித்து மகளிர் அமைப்புகள் போராட்டம்
ரெஸ்டோ பார் அனுமதியை கண்டித்து மகளிர் அமைப்புகள் போராட்டம்
ADDED : நவ 12, 2024 07:23 AM

புதுச்சேரி: முதலியார்பேட்டை இந்திய. கம்யூ., அலுவலகத்தில் மகளிர் அமைப்புகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் புதுச்சேரி மாநில தலைவர் தசரதா, மாநில செயலாளர் அமுதா, மாநிலத் துணைச் செயலாளர் சுமதி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் நளினி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் முனியம்மாள், செயலாளர் இளவரசி, துணைச் செயலாளர் உமா விநாயகம் மற்றும் அகில இந்திய பெண்கள் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் விஜயா கலந்து கொண்டனர்
புதுச்சேரியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து உள்ளது. இதற்கெல்லாம் கஞ்சா, மதுபான கடைகள், ரெஸ்டோபார் காரணமாக உள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
உடனடியாக ரெஸ்டோபர் அனுமதிகளையும் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 19, 20 ஆகிய தேதிகளில் வேன் பிரச்சாரம் செய்வது என்றும், வரும் 25 தேதி புதுச்சேரியில் பெண்களை திரட்டி பெரிய போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

