ADDED : பிப் 19, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: ஏம்பலம் தொகுதியை பொதுத் தொகுதியாக மாற்றுவதற்கான மக்கள் போராட்ட குழுவினரின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு போராட்டக் குழு தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தொகுதி முழுவதும் பொது தொகுதிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மத்திய மாநில அரசுகளுக்கு தெரிவிக்கும் வகையில் பலகட்ட போராட்டங்கள் நடத்துவது, பல ஆண்டுகளாக தனி தொகுதியாக உள்ள ஏம்பலம் தொகுதியை பொது தொகுதியாக மாற்ற நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பு குழுவினர் குப்புசாமி, ராஜராம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

