/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., எம்.பி.,யை கண்டித்து போராட்டம் அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
/
காங்., எம்.பி.,யை கண்டித்து போராட்டம் அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
காங்., எம்.பி.,யை கண்டித்து போராட்டம் அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
காங்., எம்.பி.,யை கண்டித்து போராட்டம் அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
ADDED : டிச 11, 2025 05:36 AM

புதுச்சேரி: திருப்பரங்குன்றம் தீப துாண் விவகாரத்தில், இந்து விரோத சக்திகளுக்கு துணை சென்ற புதுச்சேரி காங்., எம்.பி,.யை கண்டித்து போராட்டம் நடத்தவும் தயார் என, அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
இதுகுறித்து அவர், கூறியதாவது:
திருப்பரங்குன்றத்தில் நெடுங்காலமாக தீப துாணில் விளக்கு ஏற்றப்பட்டு வருகிறது. இவ்விவகாரத்தில் இந்து மக்கள் புண்படும் வகையில் தமிழக அரசு நடந்து கொண்டது. இதில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் இண்டி கூட்டணி கட்சிகள் மசோதா கொண்டு வருகின்றனர். இதில் புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம் முதல் கையெழுத்திட்டுள்ளார்.
இந்து விரோத சக்திகளுக்கு துணை சென்ற வைத்திலிங்கத்தை கண்டிக்கிறோம். அவருக்கு எதிராக போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம். த.வெ.க., பொதுக்கூட்டத்தில், 'பாஸ்' இல் லாதவர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அனுமதித்தது தொடர்பான புகார் குறித்து விசாரிக்கப்ப டும்.
த.வெ.க., தலைவர் விஜய், புதுச்சேரி அரசின் நிர்வாக முறையே தெரியாமல், பேசியுள்ளார். அவருக்கு சொல்லி கொடுத்தவர்கள் சரியாக சொல்லித்தரவில்லை. மாநில அந்தஸ்து விவகாரம் காங்., ஆட்சி காலத்தில் இருந்து வருகிறது. புதுச்சேரி அரசுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. அடுத்தவர்கள் கூறியதை, உண்மை நிலை அறியாமல் அப்படியே பேசியது அவரது அரசியல் முத்திர்ச்சியின்மையை கா ட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

