ADDED : ஜூலை 21, 2026 03:48 AM

புதுச்சேரி: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் அமைச்சர்களுக்கு வேலை கேட் டு சட்டசபை அருகே போராட்டம் நேற்று நடந்தது.
இப்போராட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் சிவராமகிருஷ்ணன், மாநில துணை தலைவர் உமா சங்கரி, இளம் பெண்கள் அமைப்பின் தலைவர் மணிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் எழிலன், இந்திய கம் யூ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் அந்தோணி கண்டனயுரை ஆற்றினர். அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநில செயலாளர் முரளி, மாநில பொருளாளர் ஆகாஷ் மற்றும் இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் சரவணன், அந்தோணி தாஸ், ஹம்சா, ராமசாமி, மைக்கேல், வசந்த் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பதவியேற்ற அமைச்சர்களுக்கு இதுவரையில், இலாகாக்கள் ஒதுக்கப்படாததால் அரசு துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் முடங்கியுள்ளன. உடனடியாக அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கி, மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
