/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்ளாட்சி தேர்தல் நடத்த வலியுறுத்தி போராட்டம்
/
உள்ளாட்சி தேர்தல் நடத்த வலியுறுத்தி போராட்டம்
ADDED : செப் 25, 2024 05:16 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாத மத்திய அரசு, மாநில அரசை கண்டித்து, புதுச்சேரி மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில், தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெட்டப்பாக்கத்தில் நேற்று தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்திற்கு, ஆதி திராவிடர் நலன் அணி மாநிலத் தலைவர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பரந்தாமன் வரவேற்றார். கழக சேர்மன் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராஜன் நோக்க உரையாற்றினார்.
மாநில தலைவர் ராமதாஸ் போராட்டத்தை துவக்கி வைத்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தபடாமல் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெகநாதன் கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தில், ராஜேந்திரன், ஜெயப்ரியா, கோகுல், மாநில செயலாளர்கள் மோகனசுந்தரம், சிவகுமார், மாநில இணை செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.