/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வவுச்சர் ஊழியர்களை நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
/
வவுச்சர் ஊழியர்களை நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
வவுச்சர் ஊழியர்களை நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
வவுச்சர் ஊழியர்களை நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 09, 2026 08:08 AM

புதுச்சேரி: புதுச்சேரி தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் பொதுப்பணித் துறை வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, தலைமை அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர்கள் பாலு, ராம்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, தலைமை பொறியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவில், புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 15 ஆண்டுகளாக வவுச்சர் ஊழியர்களாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த 2022 சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் அறிவித்த அரசு துறைகளில் பத்தாண்டுகள் பணி செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்திட வேண்டும்.
கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பணி செய்த வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தது போன்று பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். வரும் தேர்தலுக்கு முன், சட்டசபையை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

