/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கடையை திறக்காவிட்டால் போராட்டம்; தி.மு.க., தீர்மானம்
/
ரேஷன் கடையை திறக்காவிட்டால் போராட்டம்; தி.மு.க., தீர்மானம்
ரேஷன் கடையை திறக்காவிட்டால் போராட்டம்; தி.மு.க., தீர்மானம்
ரேஷன் கடையை திறக்காவிட்டால் போராட்டம்; தி.மு.க., தீர்மானம்
ADDED : அக் 09, 2024 04:24 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாநில தி.மு.க. மகளிர் அணி மற்றும் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாநில அவைத்தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.
மாநில மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், தொண்டரணி அமைப்பாளர் சுமதி வரவேற்றனர்.
மாநில அமைப்பாளர் சிவா , மகளிர் அணி நிர்வாகிகளிடம் உறுப்பினர் படிவம் வழங்கி பேசினார்.
கூட்டத்தில், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், அமுதாகுமார், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், தியாகராஜன், மகளிர் அணி தலைவி சந்திரகலா, துணை அமைப்பாளர் கல்யாணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ரேஷன் கடைகளை திறந்து பொருட்கள் வழங்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும். முடங்கியுள்ள மகளிர் ஆணையம், குழந்தைகள் நல ஆணையம், உள்ளூர் புகார் குழுவினை முறையாக செயல்படுத்திட வேண்டும்.
பள்ளி, கல்லுாரிகள், கோவில்கள் மற்றும் குடியிருப்புகள் அருகேயுள்ள ரெஸ்டோ பார்களை மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.