/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீபாவளி தொகுப்பு வழங்காததை கண்டித்து மாஜி எம்.எல்.ஏ., தலைமையில் போராட்டம்

ADDED : அக் 25, 2025 11:10 PM

புதுச்சேரி: தீபாவளி தொகுப்பு வழங் காததை கண்டித்து, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் தலைமையில், பொது மக்கள், ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசு சார்பில், தீபாவளியை முன்னிட்டு, மாநிலத்தில் உள்ள 3.46 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, சர்க்கரை 2 கிலோ, எண்ணைய் 2 லிட்டர், கடலை பருப்பு ஒரு கிலோ, ரவை மற்றும் மைதா அரை கிலோ கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தீபாவளி முடிந்து ஒரு வாரம் ஆகியும் இதுவரை பல பகுதிகளில் தீபாவளி தொகுப்பு வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்தும், தீபாவளி தொகுப்பை உடனடியாக வழங்க கோரி, லாஸ்பேட்டை அடுத்த செல்லப்பெருமாள் பேட்டையில் உள்ள ரேஷன் கடையை, முன்னாள்எம்.எல்.ஏ., சாமிநாதன் தலைமையில், பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் கடையை மூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, செல்ல பெருமாள்பேட்டை ரேஷன் கடை உட்பட பல க டைகளுக்கு தீபாவளி தொகுப்பை, அவசர அவசரமாக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.