/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர், முதல்வருக்கு கருப்புக்கொடி: நேரு எம்.எல்.ஏ., தலைமையில் போராட்டம்
/
கவர்னர், முதல்வருக்கு கருப்புக்கொடி: நேரு எம்.எல்.ஏ., தலைமையில் போராட்டம்
கவர்னர், முதல்வருக்கு கருப்புக்கொடி: நேரு எம்.எல்.ஏ., தலைமையில் போராட்டம்
கவர்னர், முதல்வருக்கு கருப்புக்கொடி: நேரு எம்.எல்.ஏ., தலைமையில் போராட்டம்
ADDED : அக் 28, 2025 06:18 AM

புதுச்சேரி: அரசு விழாவில் பங்கேற்ற கவர்னர், முதல்வருக்கு நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொதுநல அமைப்புகள் கருப்பு கொடி காட்டியதால் பரபரப்பு நிலவியது.
போக்குவரத்து துறை சார்பில் மின்சார பஸ்கள், தனியார் நிறுவனம் பங்களிப்புடன் இயக்குவதற்கு, நேரு எம்.எல்.ஏ., தலைமையிலான பொது நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, விழாவில் ஆர்ப்பாட்டம் நடத்த நேற்று காலை 9 மணி முதல் மறைமலை அடிகள் சாலை, கண் டாக்டர் தோட்டம் மற்றும் அண்ணா சாலையில் திரண்டிருந்தனர்.
விழா மேடைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம்.பி., மற்றும் அதிகாரிகள், கவர்னரை வரவேற்க தாவரவியல் பூங்கா எதிரே காத்திருந்தனர். அப்போது வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே கவர்னரின் கார் வந்ததும், அங்கு நின்றிருந்த நேரு எம்.எல்.ஏ, தலைமையிலான பொதுநல அமைப்பினர் கருப்பு கொடியுடன் விழா நடைபெற்ற இடத்திற்கு கூடி, கவர்னர் மற்றும் முதல்வருக்கு கருப்பு கொடியை காட்டியதால் பரபரப்பு நிலவியது.
உடன் போலீசார், கவர்னர், முதல்வர் விழா மேடைக்கு அனுப்பிவிட்டு, போராட்டக்காரர்களை தடுப்பதற்காக நுழைவு வாயிலை மூடினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
சரமாரியாக கேள்வி: இதனிடையே நேரு எம்.எல்.ஏ., விழா மேடை ஏறி கவர்னர் மற்றும் முதல்வரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். மின்சார பஸ்களை இயக்க ஸ்மார்ட் சிட்டி ரூ.23 கோடி கொடுத்துள்ளது. பிறகு ஏன், பஸ்களை இயக்க தனியாருக்கு அனுமதி தரப்பட்டது. பி.ஆர்.டி.சி., நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கலாமே. தனியார் மயத்தை எப்படி அரசு ஆதரிக்கலாம். ஒரு கி,மீ.,க்கு ரூ.30க்கு பதில், ரூ.65 வழங்குவது ஏன் என சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர் விழாவை புறக்கணித்துவிட்டு பொதுநல அமைப்புகளுடன் வெளியேறினார்.
ஊர்வலம் நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொது நல அமைப்பினர் மறைமலை அடிகள் சாலையில் ஊர்வலமாக சென்று, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக் கொடியுடன் கோஷமிட்டுவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

