/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புயல், கனமழை எச்சரிக்கை: ஏனாம் விரைந்தது அதிகாரிகள் குழு
/
புயல், கனமழை எச்சரிக்கை: ஏனாம் விரைந்தது அதிகாரிகள் குழு
புயல், கனமழை எச்சரிக்கை: ஏனாம் விரைந்தது அதிகாரிகள் குழு
புயல், கனமழை எச்சரிக்கை: ஏனாம் விரைந்தது அதிகாரிகள் குழு
ADDED : அக் 28, 2025 06:17 AM
புதுச்சேரி: வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மோந்தா' புயல் இன்று இரவு ஏனாம் அருகே கரையை கடக்க உள்ளதையொட்டி, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த அதிகாரிகள் குழுவினர் ஏனாம் விரைந்துள்ளனர்.
வங்கக்கடலில் தென்கிழக்கே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், , மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து நேற்று அதிகாலை புயலாக மாறியது. இதற்கு மோந்தா என பெயரிடப்பட்டுள்ளது.
மணிக்கு 13 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வரும் மோந்தா புயல் இன்று இரவு ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கும். அப்போது, மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். மேலும், கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய்யம் எச்சரித்துள்ளது.
காக்கிநாடா அருகே, புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. அதனையொட்டி, ஏனாம் மண்டல நிர்வாகி அங்கீத்குமார் தலைமையில், அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், சூழ்நிலைக்கேற்ப உத்தரவுகள் பிறப்பிக்கும் பொருட்டு, முதல்வர் உத்தரவின்பேரில் ஏனாம் சென்றுள்ள சிறப்பு அதிகாரியாக அமன்சர்மா, எஸ்.பி., வரதராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மண்டல நிர்வாக அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினர். தொடர்ந்து, அனைத்து துறைகளிலும், கட்டுப்பாட்டு அறைக்கள் திறக்கவும், நிவாரண பணிகளில் ஈடுபட 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.
விசாகப்பட்டினத்தில் இருந்து வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர், தாழ்வான பகுதிகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஐ.ஆர்.பி.என்., போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும், அனைத்து பள்ளிகளும் நிவாரண முகாம்களாக தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஜெனரேட்டர், மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், ஒரு வாரத்திற்க தேவையான மருந்துகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சேமித்து வைக்க அறிவுருத்தப்பட்டனர்.

