/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி போராட்டம்
/
உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி போராட்டம்
ADDED : அக் 09, 2024 04:27 AM

பாகூர் : புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி, ஐந்தாம் கட்ட போராட்டம் பாகூரில் நேற்று நடந்தது.
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, பாகூரில் நேற்று நடைபெற்ற ஐந்தாம் கட்ட போராட்டத்திற்கு, மாநில இணை செயலாளர் இளங் கோவன் தலைமை தாங்கினார். சந்திரன் வரவேற்றார்.
தலைவர் ராமதாஸ், சேர்மன் வெங்கட்ராமன், புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாத மத்திய மாநில அரசை கண்டித்தும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தி பேசினர்.
மாநில பொதுச் செய லாளர் ராஜன் நோக்கவுரை யாற்றினார்.
உதவி செயலாளர் இதயவேந்தன் இணைப்புறையாற்றினார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெகநாதன் கருத்துரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், தனஞ்ஜெயன், பரந்தாமன், கலியபெருமாள், ரஞ்சித் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

