/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 தொகுதிகளில் 24ல் ஆர்ப்பாட்டம் 'இண்டி' கூட்டணி அறிவிப்பு
/
5 தொகுதிகளில் 24ல் ஆர்ப்பாட்டம் 'இண்டி' கூட்டணி அறிவிப்பு
5 தொகுதிகளில் 24ல் ஆர்ப்பாட்டம் 'இண்டி' கூட்டணி அறிவிப்பு
5 தொகுதிகளில் 24ல் ஆர்ப்பாட்டம் 'இண்டி' கூட்டணி அறிவிப்பு
ADDED : டிச 20, 2025 06:28 AM

புதுச்சேரி டிச. 20-: முதலியார்பேட்டை, இந்திய கம்யூ., அலுவலகத்தில் நேற்று இண்டி கூட்டணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா, இந்திய கம்யூ., மாநில செலாளர் சலீம் உட்பட இண்டி கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, கூட்டத்தில் மத்திய அரசு, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் ( 100 நாள் வேலை திட்டம்) பெயரை மாற்றி விக்சிட் கிராமின் திட்டம் என்று காந்தியின் பெயரை நீக்கியுள்ளது.
மேலும் திட்டத்தில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம், மாநில அரசின் பங்கு 40 சதவீதமாக மாற்றியுள்ளது. இதனை கண்டித்து வரும் 24ம் தேதி காரைக்கால், வில்லியனுார், பாகூர், நெட்டபாக்கம், திருக்கனுார் ஆகிய 5 இடங்களில் போராட்டம் நடத்தப்போவதாக இண்டி கூட்டணி அறிவித்தது.