/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுப்பணி வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
/
பொதுப்பணி வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
பொதுப்பணி வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
பொதுப்பணி வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
ADDED : டிச 20, 2025 06:27 AM
புதுச்சேரி: பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வரும் வவுச்சர் ஊழியர்களை, பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என, அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கூட்டமைப்பு தலைவர் சரவணன், முதல்வர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனு;
புதுச்சேரி பொதுப்பணித்துறையில், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளில் கடந்த 15 ஆண்டு காலமாக 1,300 வவுச்சர் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். எங்களது அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பின் தொடர் போராட்டத்தின் விளைவாக, அவர்களுக்கு 18 அயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, 15 ஆண்டு காலமாக போராடி வருகிறோம்.
கூட்டமைப்பின் தொடர் அழுத்தம் காரணமாக, பொதுப்பணித்துறை எங்களது கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு ஒரு கோப்பினை உருவாக்கி பொதுப்பணித்துறை செயலருக்கு அனுப்பி உள்ளது. இந்த கோப்பு மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்திட வேண்டும். பொதுப்பணித்துறையில் உள்ள 1000க்கும் மேற்ப்பட்ட நிரந்தர பல்நோக்கு ஊழியர் காலி பணியிடத்தை,வவுச்சர் ஊழியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

