/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொடி நாளுக்கு தாராளமாக நிதி வழங்குங்கள்: கவர்னர்
/
கொடி நாளுக்கு தாராளமாக நிதி வழங்குங்கள்: கவர்னர்
ADDED : டிச 08, 2024 05:26 AM
புதுச்சேரி : கொடி நாள் நிதிக்கு புதுச்சேரி மக்கள் தாராளமாக பங்களிப்பு அளிக்குமாறு கவர்னர் கைலாஷ்நாதன் கேட்டு கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் டிச. 7ம் தேதி, நாடு முழுதும் கொடி நாள் கொண்டாடப்படுகிறது. ராணுவம், கடற்படை, விமானப் படை வீரர்களுக்கு இதயப் பூர்வமாக மரியாதை செலுத்துவதை இந்த நாள் குறிக்கிறது.
இந்நாளில், பாதுகாப்பு படையினர் மற்றும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொடி நாள் நிதியாக நாம் அளிக்கும் நிதி முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாரின் நலனுக்கு நேரடியாக சென்று சேர்கிறது.
இது தேச பக்தியையும் ஒற்றுமை உணர்வையும் வளர்த்து பொதுமக்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துகிறது.புதுச்சேரி அரசும், மக்களும் கொடி நாளை மிகுந்த உற்சாகமாக அனுசரிப்பதை நான் பார்க்கிறேன்.
நமது தேசத்தைப் பாதுகாப்பதில் நம்முடைய படை வீரர்கள் ஆற்றிய சேவைகளுக்கு, நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக கருதி கொடி நாள் நிதிக்கு தாராளமான பங்களிப்பை செய்யுமாறு புதுச்சேரி மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.