தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குப்பை சேகரிக்க மின் வாகனங்கள் நகராட்சிகளுக்கு வழங்கல்

 குப்பை சேகரிக்க மின் வாகனங்கள் நகராட்சிகளுக்கு வழங்கல்

 குப்பை சேகரிக்க மின் வாகனங்கள் நகராட்சிகளுக்கு வழங்கல்


ADDED : பிப் 08, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 04:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் உழகரை நகராட்சி பகுதிகளில் குப்பை சேகரிக்க மின் வாகனங்கள் வழங்கப்பட்டது.

உழவர்கரை மற்றும் புதுச்சேரி நகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் உள்ள மறு சுழற்சிக்கு உகந்த கழிவுகளை சேகரிப்பவர்களை கண்டறிந்து துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் முறை சாரா குப்பை சேகரிப்பவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கழிவுகளை சேகரித்து எளிதாக கொண்டு செல்வதற்காக, உழவர்கரை நகராட்சி டில்லியை சார்ந்த சே எர்த் என்ற அரசு சாரா நிறுவனத்திடம் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியின் மின்சார வாகனம் கோரியது.

அதனடிப்படையில், சே எர்த் மற்றும் வேர்ல்டு வைடு டெக்னாலாஜி என்ற நிறுவனமும் இணைந்து 12 மின் வாகனங்களை வழங்கியது.

இந்த வாகனங்கள் வழங்கும் விழா, புதுச்சேரி நகராட்சியில் நேற்று நடந்தது. உழவர்கரை ஆணையர் சுரேஷ்ராஜ் தலைமை தாங்கினார். புதுச்சேரி நகராட்சி ஆணையர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி கிழக்கு எஸ்.பி., சுருதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் சேர் எர்த் என்.ஜி .ஓ., தலைவர் ரன்வீர்தன்வர், வேர்டு வைடு டெக்னாலஜி, துணை தலைவர் வரச்சலா அப்ரோல், பெரு நிறுவன சமூக பொறுப்பு மேலாளர் லெஸ்லீ ஸ்டீவன் ஆகியோர் முறைசாரா குப்பை சேகரிப்பவர்களின் பயன்பாட்டிற்காக மின்சார வாகனங்களை புது ச்சேரி மற்றும் உழவர்களை நகராட்சியிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us