/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கல்
/
மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கல்
ADDED : பிப் 04, 2024 03:29 AM

புதுச்சேரி : சாரம் அரசு பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் சார்பில் மாலை நேர சிற்றுண்டி வழங்கும் துவக்க விழா நடந்தது.
புதுச்சேரி சாரம் எஸ்.ஆர்.எஸ் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1990 முதல் 2000ம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, பள்ளிக்கும் அங்கு பயிலும் மாணவர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த ஆண்டு போன்று, இந்தாண்டும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் துவக்க விழா பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமலதா தலைமை தாங்கினார்.
பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் அண்ணாமலை, அமுதா, மஞ்சினி, புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி, சிற்றுண்டி வழங்கும் விழாவை துவக்கி வைத்தனர்.
இதன் மூலம் நேற்று முன்தினம் (2ம் தேதி) முதல் 50 நாட்கள் தொடர்ந்து மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இதற்காக ரூ. 25,000 பணம் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
இதில், முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.