/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீ விபத்தில் பாதிப்பு நிவாரணம் வழங்கல்
/
தீ விபத்தில் பாதிப்பு நிவாரணம் வழங்கல்
ADDED : நவ 16, 2025 03:37 AM

திருபுவனை: திருவாண்டார்கோவிலில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அங்காளன் எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.
திருபுவனை அடுத்த திருவாண்டார்கோவில், சின்னப்பேட், வாய்க்கால் மேட்டு வீதியை சேர்ந்தவர் தேவராசு-கலியம்மாள் தம்பதியரின் கூரை வீடு கடந்த 12ம் தேதி மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. இதில், ரூ.2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஜே.சி.எம்., மக்கள் மன்றம் சார்பில், அங்காளன் எம்.எல்.ஏ., 25 கிலோ அரிசி, துணி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். எரிந்து சாம்பலான ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ஜே.சி.எம்., மக்கள் மன்ற தொகுதி தலைவர் ரவிக்குமார் உடன் இருந்தார்.

