/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கல்
/
பள்ளி மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கல்
ADDED : பிப் 10, 2024 06:20 AM

புதுச்சேரி : அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது.
முத்தியால்பேட்டை தொகுதியில் அமைந்துள்ள சின்னாத்தா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் சாய் வர்கீஸ் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் இக்னிசஸ் மேரி சபீனா முன்னிலை வகித்தார்.
பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., 264 மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கினார். பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடைப்பந்து மைதானத்தை துவக்கி வைத்தார். மாணவிகளுக்கு கையேடுகளை வழங்கினார்.
விரிவுரையாளர் துர்காதேவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். விரிவுரையாளர் தனலட்சுமி நன்றி கூறினார்.