தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அமைப்புசார தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கல் 

அமைப்புசார தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கல் 

அமைப்புசார தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கல் 


ADDED : நவ 19, 2024 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2024 06:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

இதுகுறித்து அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் அதிகாரி வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி அமைப்புச்சாரா தொழிலாளர் நலச்சங்கத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி வரை உறுப்பினராக பதிவு செய்தவர்களுக்கு 2024ம் ஆண்டிற்கான அரசு அறிவித்த தீபாவளி உதவித்தொகை ரூ. 1,500, உறுப்பினர்கள் வங்கி கணக்கின் மூலம் செலுத்தப்பட்டு விட்டது.

இருப்பினும், தீபாவளி உதவித்தொகை கிடைக்கப்பெறாத உறுப்பினர்கள் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள அமைப்புச்சாரா நலச்சங்க அலுவலகத்தை நேரில் அணுகி, தங்களின் உறுப்பினர் அடையாள அட்டை, 2024ம் ஆண்டிற்கான சந்தா கட்டிய ரசீது, தற்போது பயன்பாட்டில் உள்ள வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை நகல்களை சமர்ப்பித்து சரிசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அவ்வாறு சமர்ப்பிக்க தவறும் உறுப்பினர்களுக்கு தொகையை பெறுவதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது. ஆகையால், உடனடியாக உறுப்பினர்கள் தங்களது வங்கி கணக்கினை உரிய முறையில் சரிசெய்து, அலுவலகத்தில் தெரிவித்து, சலுகையை குறித்த காலத்திற்குள் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us