/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்
ADDED : ஏப் 26, 2025 03:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மங்கலம் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டரை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வழங்கினார்.
புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில், அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் இலவச ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மங்கலம் தொகுதியைச் சேர்ந்த 3 மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சமூக நலத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், பயனாளிகளுக்கு ஸ்கூட்டரை வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இணை இயக்குனர் ஆறுமுகம், அலுவலர் சுருதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.