/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்கல்
/
மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்கல்
ADDED : ஜூன் 02, 2025 10:53 PM

புதுச்சேரி: சாரம் அரசு தொடக்கப் பள்ளியில், வட்டம் 1, பள்ளித்துணை ஆய்வாளர் அனிதா மாணவர்களுக்கு இனிப்புகள், புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினார்.
கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சாரம் அரசு தொடக்கப் பள்ளியில் வட்டம் -1, பள்ளித் துணை ஆய்வாளர் அனிதா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பள்ளி மாணவர்களுக்கு இன்றைய சூழலில் ஒழுக்கத்தின் மேன்மை, கல்வியின் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினர். தொடர்ந்து, மாணவர்களுக்கு இனிப்புகள், பாட புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினார்.இதில், பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, ஆசிரியர்கள் ஏஞ்சலின் சொர்ணலதா, வள்ளி, ரோஷிணி, பிரதீபா, உத்திராவதி, இந்திரா, பானுமதி, வேதவள்ளி, மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.