/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதிதிராவிடர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
ஆதிதிராவிடர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : பிப் 21, 2024 06:53 AM

புதுச்சேரி : ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், காரைக்கால் மாவட்ட அதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 3.91 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
சட்டசபை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 3.91 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர் நோய் சிகிச்சைக்காக 17 பயனாளிகளுக்கு 10.70 லட்சம் ரூபாய், ஏழை பெண்கள் திருமண உதவித்தொகையாக 45 பயனாளிகளுக்கு 44.50 ஆயிரம், கருவுற்ற தாய்மார்கள் 33 பேருக்கு 4.44 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 6 பயனாளிகளுக்கு 11 லட்சம், 2வது தவணையாக 38 பயனாளிகளுக்கு 75 லட்சம், 3வது தவணையாக 12 பயனாளிகளுக்கு 12 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
கலப்பு திருமணம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு 25 லட்சம் ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தி, பண வைப்பு தொகை பத்திரம் வழங்கப்பட்டது.
இதுபோல் காரைக்கால் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 2.9 கோடி ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் அமைச்சர் சாய் சரவணன்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன், உதவி இயக்குநர் மதன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

