/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஜன 18, 2025 05:43 AM

காரைக்கால் : காரைக்கால் சமூக நலத்துறை சார்பில், காரைக்காலில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா நடந்தது.
அமைச்சர் தேனீ ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
விழாவிற்கு அமைச்சர் திருமுருகன் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கி பேசியதாவது:
புதுச்சேரி அரசு பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. தருமபுரம் பகுதியில் ரூ.35 கோடி மதிப்பில் ஊனமுற்றோர் நலமையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வைப்பு நிதிக்காக 190 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கான அடையாள அட்டை வழங்கப்படும். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 300 மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன' என்றார்.