/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலோர காவல் படைக்கு 3 மீட்பு படகுகள் வழங்கல்
/
கடலோர காவல் படைக்கு 3 மீட்பு படகுகள் வழங்கல்
ADDED : ஆக 20, 2025 07:43 AM

புதுச்சேரி : கடலோர காவல் படைக்கு, பேரிடர் மேலாண்மை துறை நிதியின் மூலம் புதிதாக வாங்கப்பட்ட 3 ரப்பர் மீட்பு படகுகளை சீனியர் எஸ்.பி., கலைவாணன் நேற்று பார்வையிட்டு, சோதனை மேற்கொண்டார்.
புதுச்சேரி கடலோர போலீஸ் நிலையம் தேங்காய்திட்டு துறைமுக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இயற்கை பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளும் வகையில், பேரிடர் மேலாண்மை துறை மூலம் ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு பிரிவில் இருந்து புதிதாக 3 ரப்பர் படகுகள் வாங்கப்பட்டுள்ளன.
அதன்படி, நேற்று புதுச்சேரி கடலோர போலீஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்ட பேரிடர் மீட்பு படகுகளை சீனியர் எஸ்.பி., கலைவாணன் பார்வையிட்டு, சோதனை மேற்கொண்டார்.
இதில், கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
தொடர்ந்து அவர் கூறுகையில், 'புதிதாக வாங்கப்பட்டுள்ள ரப்பர் மீட்பு படகுகள் மூலம் பேரிடர் காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை விரைவாக மீட்க முடியும். பெட்ரோலில் இயங்கும் இந்த படகுகளை இயக்க போதிய பயிற்சி தேவைப்படுகிறது.
இதற்காக, கடலோர காவல்படையில் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிக்காக தேசிய பேரிடர் மீட்பு பிரிவிற்கு, அனுப்பி வைக்கப்பட உள்ளனர்' என்றார்.