/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கல்
/
அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கல்
ADDED : அக் 17, 2024 04:39 AM

புதுச்சேரி: உருளையன்பேட்டை, பிரியதர்ஷினி நகரில் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்தின் மூலம் உருளையன்பேட்டை தொகுதி, பிரியதர்ஷினி நகரில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த குடியிருப்புகள், தகுதியின் அடிப்படையில் வீடற்ற ஏழை மக்களுக்கு வழங்க, மாவட்ட தேர்வுக் குழுவால் கலெக்டர் முன்னிலையில் குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, தேர்த்தெடுக்கப்பட்ட 32 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணையை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். இதில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் திருமுருகன், நேரு எம்.எல்.ஏ., குடிசை மாற்று வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் சுந்தரராஜ், உதவி பொறியாளர் சுதர்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

