/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்
/
பொது மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்
ADDED : டிச 04, 2024 05:47 AM

புதுச்சேரி: பாகூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவர்கிரீன் நிறுவனம் சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
பெஞ்சல் புயல் கனமழை மற்றும் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அக்கிராமங்களில் போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால், அத்தியவாசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பிள்ளையார்குப்பம் எவர்கிரீன் நிறுவனம் சார்பில் கோதுமை, ரவை மற்றும் பிரட் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.