/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி மாணவியருக்கு 'லேப்டாப்' வழங்கல்
/
பள்ளி மாணவியருக்கு 'லேப்டாப்' வழங்கல்
ADDED : பிப் 22, 2024 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சுல்தான்பேட்டையில் அரசுப் பள்ளி மாணவியருக்கு, மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில், வில்லியனுார் தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டை, காயிதே மில்லத் அரசு மேல்நிலை பள்ளி மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடந்தது.
நிகழ்வில், கல்வி அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சித் தலைவர் சிவா கலந்து கொண்டு, மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கினர். பள்ளி துணை முதல்வர் மோகன், ஆசிரியர்கள் ராமலிங்கம், விஜயலட்சுமி, ஹேமலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.