ADDED : ஜன 01, 2025 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முத்தியால்பேட்டை சோலை நகர் மீனவ பயனாளிகளுக்கான மீன்பிடி வலையினை முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் வழங்கினார்.
முத்தியால்பேட்டை தொகுதி தி.மு.க., சார்பில் சோலை நகர் (வடக்கு) பகுதியை சேர்ந்த 31 மீனவ பயனாளிகளுக்கு மீன்பிடி வலையினை முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் வழங்கினார். இதில், முன்னாள் தொகுதி மீனவர் அணி துணை செயலாளர் பூபதி, கிருஷ்ணன், தேசப்பன், பாவாடை, வேல்முருகன், மணிபாலன், நடராஜன் உள்ளிட்ட தொகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

