ADDED : ஜூலை 19, 2025 02:31 AM

புதுச்சேரி : உருளையன்பேட்டை தொகுதி இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை எதிர்க்கட்சி தலைவர் சிவா வழங்கினார்.
உருளையன்பேட்டை தொகுதி இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிக்கும் வகையில், உருளையன்பேட்டை தொகுதி இளைஞர்கள் ஐசக் இமானுவேல், பிரேம்குமார், நிதிஷ்,விஷ்வா, மாதவன், சந்துரு, ஆல்பர்ட், தினேஷ் குரு, ராகுல், ராகவன், விக்னேஷ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்களுக்கு தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் ஏற்பாட்டில், விளையாட்டு உபகரணங்களை எதிர்க்கட்சி தலைவர் சிவா வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், தொகுதி பொருளாளர் சசிகுமார், சுற்றுச்சூழல் அணி துணை தலைவர் நவீன், மாணவரணி துணை அமைப்பாளர் ஸ்டீபன் ராஜ், கிளை செயலாளர்கள் அகிலன், விஜயகுமார், பிரகாஷ், கிரி, நிர்வாகிகள் வேலாயுதம், பாலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.