/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய போட்டிகளில் பங்கேற்கும் குராஷ் வீரர்களுக்கு சீருடை வழங்கல்
/
தேசிய போட்டிகளில் பங்கேற்கும் குராஷ் வீரர்களுக்கு சீருடை வழங்கல்
தேசிய போட்டிகளில் பங்கேற்கும் குராஷ் வீரர்களுக்கு சீருடை வழங்கல்
தேசிய போட்டிகளில் பங்கேற்கும் குராஷ் வீரர்களுக்கு சீருடை வழங்கல்
ADDED : டிச 11, 2025 05:24 AM

புதுச்சேரி: தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான குராஷ் தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டிகள் உத்திரபிரதேச மாநிலத்தில் வரும் 17ம் தேதி நடக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்க புதுச்சேரி குராஷ் தற்காப்பு கலை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த வீரர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்ச்சி முத்திரையர்பாளையம் ஆதித்யா பாரதிதாசன் பள்ளி வளாகத்தில் நடந்தது.
இந்திய பள்ளி கூட்டமைப்பு பொறுப்பாளர் பிரகாஷ், டாக்டர் ரவிக்குமார், குராஷ் தற்காப்பு கலை சங்க பொதுச்செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு சீருடைகளை வழங்கி, வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.இதில், உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தராஜ், முன்னாள் பொதுப் பணித்துறை கண்காணிப்பாளர் இளையநம்பி, மூத்த பயிற்சியாளர்கள் முனுசாமி, குணசேகர், விஸ்வநாதன், சிவஞானம், மகேஸ்வரன், கோகுலராமன், பச்சையப்பன், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.