ADDED : நவ 04, 2024 06:32 AM

புதுச்சேரி: வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தனது பிறந்த நாளை கொண்டாடி, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
காங்.,சட்டசபை தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தனது 51வது, பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.தொடர்ந்து, ஒலாந்திரியா இல்லம், கிருஷ்ணா நகர், ஜாலி ஹோமில் உணவு வழங்கினார்.
பெத்துசெட்டி பேட்டை சிவசுப்ரமணியர் கோவிலில் சிறப்பு பூஜை, மணக்குள விநாயகர் கோவிலில், முன்னாள்முதல்வர் நாராயணசாமி தலைமையில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். லாஸ்பேட்டை அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள், ரமேஷ், சம்பத், பிரகாஷ்குமார், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், எம்.எல்.ஏ., பாஸ்கர், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
லாஸ்பேட்டை தொகுதியில், நலத்திட்ட உதவிகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 70 சதவீதம் மதிப்பெண் பெற்றமாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.