/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
மீனவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஏப் 23, 2025 04:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த மீனவ பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டையினை அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார்.
புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட வைத்திகுப்பம், குருசுகுப்பம் மீனவ கிராமங்களில் வசிக்கும் 71 மீனவ நபர்களுக்கு ஓய்வூதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்று, பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டையினை வழங்கினார். நலத்துறை இயக்குனர் இஸ்மாயில், துணை இயக்குனர் நடராஜன், துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.