ADDED : மே 04, 2025 04:03 AM

புதுச்சேரி : உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் டாக்டர் நாராயணசாமி கேசவன் நலத்திட்ட உதவிகள் வழங்கி, நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.
உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சார்பில், உழைப்பாளர் தின விழா ரெட்டியார்பாளையத்தில் நடந்தது. உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகரும், சமூகசேவகர் நாராயணசாமி கேசவன் பங்கேற்று, தொழிலாளர்களுக்கு தனது சொந்த செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 4 தொழிலாளர்களுக்கு தள்ளுவண்டிகள், இரண்டு பெண்களுக்கு தையல் இயந்திரம், சாலையோர 2 தொழிலாளர்களுக்கு பூக்கடைகள் ஏற்பாடு செய்து கொடுத்தார். 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
உழவர்கரை தொகுதி, ரெட்டியார் பாளையம், கம்பன் நகர், மூலக்குளம், எம்.ஜி.ஆர்., நகர் நுழைவாயில், ஏ.ஜி.பத்மாவதி மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பொது மக்கள் பயன் பெரும் வகையில், நீர், மோர் பந்தலை அமைத்து கொடுத்தார்.