ADDED : ஜன 07, 2026 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் காங்., மாநில செயலாளர் குமரன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக வைத்திக்குப்பம் மீனவர் பகுதியை சார்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மீன்பிடி வலைகள் மற்றும் அதனை சார்ந்த உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ராஜாராம், கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமரன், வாழைகுளம் முரளி, சித்தானந்தம், மர்வின் மற்றும் வைத்திகுப்பம் மீனவரணியினர் உடனிருந்தனர்.

