/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி தமிழ்ச் சங்க காலண்டர் வெளியீடு
/
புதுச்சேரி தமிழ்ச் சங்க காலண்டர் வெளியீடு
ADDED : ஜன 07, 2026 05:30 AM

புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தின் காலண்டரைமுதல்வர் ரங்கசாமி வெளியிட, அமைச்சர் லட்சுமி நாராயணன் பெற்றுக் கொண்டார்.
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் தமிழ் எண்களை அடிப்படையாகக் கொண்ட தமிழ் காலண்டர் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான திருவள்ளுவர் ஆண்டு 2057க்கான காலண்டர்வெளியீட்டு விழா முதல்வர் அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் மோகன்தாசு வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று காலண்டரை வெளியிட, அமைச்சர் லட்சுமி நாராயணன் பெற்றுக் கொண்டார்.
இதில் துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள்செல்வம், துணைச்செயலர் தினகரன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், ராஜா, சுரேஷ்குமார், சிவேந்திரன், ஆனந்தராசன், கிஷோர், பரசுராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
காலண்டரில்தமிழ்எண்கள் மட்டுமல்லாது ஆங்கில நாட்களையும் குறிக்கும் விதமாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் விதமாகஉருவாக்கப்பட்டுள்ளது. மறைந்த தமிழறிஞர்கள் 90 பேரின் படங்கள், அவர்களது பிறந்த நாள், நினைவு நாளைக் குறிக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது.

