/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - பெங்களூர் இடையே பி.ஆர்.டி.சி., அல்ட்ரா டீலக்ஸ் பஸ் இயக்கம் துவக்கம்

ADDED : மார் 19, 2024 05:18 AM

புதுச்சேரி: புதுச்சேரி - பெங்களூர் இடையே பி.ஆர்.டி.சி. புதிய அல்ட்ரா டீலக்ஸ் பஸ் நேற்று முதல் இயங்க துவங்கியது.
பி.ஆர்.டி.சி.யில் தொலைதுார வழித்தடத்தில் இயக்கப்படும் பழைய பஸ்கள் மாற்றி புதிய பஸ்கள் வாங்க புதுச்சேரி பட்ஜெட்டில் ரூ. 17.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் மூலம் 38 புதிய பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டது. இதில் 26 புதுச்சேரிக்கும், 12 காரைக்காலுக்கு இயக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 18 பஸ்கள் பாடி கட்டும் பணி முடிந்து கடந்த மாதம் புதுச்சேரி வந்தது. கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி கடந்த 1ம் தேதி பஸ்கள் இயக்கத்தை துவக்கி வைத்தனர்.
இதில், திருப்பதி, மாகிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பெங்களுருக்கு இயக்கப்பட்ட பழைய பஸ் நிறுத்தப்பட்டு, புதிதாக வாங்கப்பட்ட அல்ட்ரா டீலக்ஸ் பஸ் இயக்கம் நேற்று துவங்கியது.
இரவு 11:00 மணிக்கு புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. பெங்களூரில் இருந்து பகல் 12:30 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி வருகிறது.
சாய்வு இருக்கை (புஷ்பேக்) வசதி கொண்ட இந்த பஸ் கட்டணம் முன்பதிவுடன் சேர்த்து ரூ. 460 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்களை பி.ஆர்.டி.சி. இணையதளம் மூலமும், புதிய பஸ் நிலையத்தில் உள்ள டிக்கெட் புக்கிங் சென்டர் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.