/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
பி.ஆர்.டி.சி., தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 22, 2025 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பி.ஆர்.டி.சி., ஒப்பந்த ஊழியர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பி.ஆர்.டி.சி., சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டு போராட்ட நடவடிக்கை குழு சார்பில், பி.ஆர்.டி.சி., தலைமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வேலையன், ராஜேந்திரன், பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் டிரைவர், கண்டக்டர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் 7 வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டது.