/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.என்.எல்., விழிப்புணர்வு ஊர்வலம்
/
பி.எஸ்.என்.எல்., விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : அக் 06, 2024 04:27 AM

புதுச்சேரி: புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில், விழிப்புணர்வு பைக் ஊர்வலத்தை முதன்மை பொது மேலாளர் திலகவதி துவக்கி வைத்தார்.
பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 25ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில் விழிப்பணர்வு பைக் ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை புதுச்சேரியின் முதன்மை பொதுமேலாளர் திலகவதி கொடியசைத்து துவக்கி வைத்து, பி.எஸ்.என்.எல்., 4ஜிசேவை, அக்டோபர் மாத இறுதிக்குள் புதுச்சேரி முழுதும் கிடைக்கும். பைபர் நெட்வொர்க் (FTTH) சலுகைகளை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில்துவங்கிய ஊர்வலம் புஸ்சிவீதி, திருவள்ளுவர் சாலை, காமராஜ் சாலை வழியாக முதன்மை பொது மேலாளர்அலுவலகத்தில் முடிவடைந்தது.
ஊர்வலத்தில் 4ஜி, பைபர் (FTTH) மற்றும் வை-பை ரோமிங்போன்ற சேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.