/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுக்கணக்கு குழு கூட்டம் துவங்கியது
/
பொதுக்கணக்கு குழு கூட்டம் துவங்கியது
ADDED : பிப் 01, 2024 05:18 AM

புதுச்சேரி: பொதுக் கணக்கு குழுவின் மூன்று நாள் கூட்டம் நேற்று துவங்கியது.
புதுச்சேரி சட்டசபை செயலகத்தின் கருத்தரங்க கூடத்தில் பொது கணக்கு குழுவின் மூன்று நாள் கூட்டம் நேற்று துவங்கியது. பொதுக்குழு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் சிவா, ஜான்குமார், செந்தில்குமார், பாஸ்கர், லட்சுமிகாந்தன், அசோக்பாபு, வெங்கடேசன், முதன்மை கணக்காய்வு தலைவர் ஆனந்த், தணிக்கை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2016-17ம் ஆண்டில் துறை ரீதியாக நிலுவையில் உள்ள கணக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டன. உள்துறை, ஜெயில் உள்ளிட்ட நான்கு துறைகளின் நிலுவையில் உள்ள கணக்கு தாக்கல் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.
இரண்டாம் நாளான இன்று நிதி, கணக்கு மற்றும் கருவூலத் துறை, தொழில் என பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள கணக்கு தாக்கல் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.