/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

ADDED : மே 20, 2025 07:20 AM

புதுச்சேரி : புதுச்சேரி பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்ப்டடுள்ளனர்.
புதுச்சேரி பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 2025-28ம் ஆண்டிற்கான தேர்தல் நடத்தப்படடது. இதில் சங்கத்திற்கு தலைவராக பிரபாகரன், துணைத் தலைவராக ஆறுமுகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், நுகர்வோர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோகன், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு கவுரவத் தலைவர் சேஷாச்சலம், ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்கம் தலைவர் மனோகரன் மற்றும் சங்க உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி பொது ஊழியர் கூட்டுறவு சங்கம் வி.வி.பி. நகரில் அமைந்துள்ளது. இச்சங்கத்தில் 6000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உறுப்பினராக இருந்து வருகின்றனர். இந்த சங்கமானது 1956ல் துவங்கப்பட்டு இன்றுவரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்த சங்கம் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருவதோடு, சங்க உறுப்பினர்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. சங்கத்திற்கு நிரந்தர வைப்புத் தொகையும் சங்கத்தின் மூலம் பெறப்பட்டு வருகின்றது.